Advertisement

அரசியல்: 16-ஏப்-2018

கோவை சிறைச்சாலை மைதானத்தில் நேற்று அரசு பொருட்காட்சியை செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் திறந்து வைத்தார். அருகில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, கோவை கலெக்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் .
புதுடில்லியில் நடந்த பா.ஜ., தேர்தல் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் பா.ஜ., தலைவர்கள் புதுடில்லி பா.ஜ., தலைமைச் செயலகத்தில் நடந்த தேர்தல் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
புதுடில்லியில் பா.ஜ., தலைமைச் செயலகத்தில் நடந்த மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி மற்றும் க்ட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா.
ராஷ்டிரிய லோக் தள் கட்சி தலைவர் அஜீத்சிங் மீரட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மதுரையில் கலெக்டர் ஆபிஸ் விரிவாக்க கட்டடத்தின் துவக்க விழாவில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று டில்லியில் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்று பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
புதுடில்லியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சித்தர்கா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
புதுடில்லியில் நடந்த பா.ஜ., மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ. தேசிய தலைவர் அமீத்ஷா கலந்து கொண்டனர்
 
Advertisement