Advertisement

அரசியல்: 13-மார்ச்-2018

பா.ஜ.,வைச் சேர்ந்த அனில் பலுனி ராஜ்யசபா தேர்தலுக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உ.பி., மாநிலம் மிர்ஜாபூரில் புதிய சோலார் பவர் பிளான்ட் துவக்க விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி கலந்து கொண்டனர்.
முன்னாள் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான நரேஷ் அகர்வால் பா.ஜ.,வில் இணைந்ததையொட்டி மத்திய அமைச்சர் பியூயஸ் கோயல் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டில்லியில் நடந்த சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
புதிய மத்திய விமானபோக்குவரத்து அமைச்சராக சுரேஷ் பிரபு நேற்று டில்லியில் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு சென்றார்.
 
Advertisement