Advertisement

அரசியல்: 07-டிச-2017

மகாபரிநிர்வான் திவாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு உ.பி., லக்னோவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் சிலைக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் மாநில முதல்வர் தேவேந்திரா பாட்னாவிஸ் இருவரும் நேற்று மும்பையில் மகாபரிநிர்வான் திவாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கோல்கட்டாவில் நடந்த சன்ஹாடி திவாஸ் எனப்படும் அமைதி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
நேற்று டில்லியில் நடந்த பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கலந்து கொண்டார்.
டில்லியில் நேற்று நடந்த மத்திய தகவல் கமிஷன் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மஹாபரிநிர்வான் திவாைஸ முன்னிட்டு விதான் சபாவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இடம்: விதான் சபா, டில்லி.
குஜராத் மாநிலம் தன்துகாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா நேற்று ஆமதாபாத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் அன்ஜார் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.
குஜராத் மாநிலம் தன்துகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு வீரவாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
 
Advertisement