Advertisement

அரசியல்: 04-டிச-2017

பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா குஜராத் மாநிலம் மான்ட்வி நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் இருவரும் பாட்னாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் குமார் விஸ்வாஸ் டில்லியில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கட்சியினரை சந்தித்தார்.
மத்திய சுற்றுலா, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் நேற்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடி குஜராத் மாநிலம் சுரேந்திரநகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் நடந்த தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
பீகார் முதல்வர் நித்தீஷ் குமார் பாட்னாவில் நடந்த பள்ளிமாணவர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் நேற்று மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று சூரத் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement