Advertisement

அரசியல்: 30-நவ-2017

தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் சிறப்பு தபால் தலை வெளியிட்ட முதல்வர் பழநிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
குஜராத் மாநிலம் மோர்பியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
குஜராத் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ஆனந்த் சர்மா, புபேந்திர சிங் ஹூடா, மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குஜராத் மாநிலம் அம்ரேலியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டு பேசினார்.
மத்திய பிரதேசத்தில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக தொடர்ந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி போபாலில் நடந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். ஹரியானா கவர்னர் கப்தான் சிங் மற்றும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரஜ சங்கல்ப யாத்ராவில் கலந்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி இடம்: யெம்மிக்னார்
அம்ரேலியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு கலப்பை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினர்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மாநில நிதயமைச்சர் அமித் மித்ரா இருவரும் கோல்கட்டா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
குஜராத் மாநிலம் சோம்நாத் கோவிலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வருகை தந்தார்.
பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் ஹார்னட்டில் அவரது தந்தை கவிராஜ் சிலைக்கு அவரது நினைவு நாளில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
மோர்பியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
டில்லி வந்த சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் என்ஜி எங் கென்னை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.
 
Advertisement