Advertisement

அரசியல்: 29-நவ-2017

சட்டையணியாமல் முண்டாசு கட்டிக்கொண்டு லுங்கியுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்த விவசாயி ஜெயராமனை போலீசார் தண்டையார் பேட்டை தேர்தல் அலுவலகத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றினர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரியிடம் குறைகளை கேட்டறிந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஒடிசா சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பிரச்னையை வலியுறுத்தி காங்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இடம்:புவனேஸ்வர்.
குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ. சார்பில் நடந்த செய்தியார்கள் சந்திப்ப கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டியளித்தார்.இடம்: ஆமதாபாத்.
பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சி நிறுவன விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கலந்துகொண்டார்.இடம்:பாட்னா.
 
Advertisement