Advertisement

அரசியல்: 17-மே-2017

புதுடில்லியில், ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கில், ஆபரேஷன் கிளீன் மணி என்ற புதிய இணையதளத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி துவக்கி வைத்தார்.உடன் வருவாய் செயலாளர் ஹஸ்முக் ஆதியா உள்ளார்.
அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில், இயற்கையுடன் மக்கள் என்ற கருத்தரங்கில், முதல்வர் மனோகர் லால் கட்டார் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வீட்டிற்கு அவரை சந்திக்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
பீகார் மாநில மாஜி முதல்வரும் எச்.ஏ.எம்(எஸ்) கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி , பாட்னாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்தியா-பாலஸ்தீனம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ்- பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் ஒப்பந்தங்களை பரிமாற்றிக்கொண்டனர். இடம்: புதுடில்லி.
 
Advertisement