Advertisement

புகைப்பட ஆல்பம்: அப்பல்லோவில் சோகமயம் !

சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசலை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.படம்.சுரேஷ் கணணன்
சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி பவனில் கைவினை பெருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் விற்பனை வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் மகளிர். படம் : காயத்திரி . செய்தி : ஸ்ரீனிவாசன்.
பழநி மலைக்கோயில் ரோப்காருக்கு புதிதாக வந்துள்ள பெட்டிகள். படம் : கே.மணிகண்டன்.
பழநி கோயில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே தற்காலிக டாய்லெட் பயன்பாடின்றி சேதமடைந்து வருகிறது. படம் : கே.மணிகண்டன்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் உயர்படிப்புக்கு சென்ற திருப்பூரை சேர்ந்த டாக்டர் சரவணன் எட்டு மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை பெற்றோரிடம் நலம் விசாரித்தார்.படம்:ரா.தீபன்
பழநி கோயில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. படம் : கே.மணிகண்டன்.
பழநி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்த சிறிது நேரத்திலே மீண்டும் தள்ளுவண்டி கடைகள் வந்தது: கே.மணிகண்டன்.
பழநி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் , போலீசார் வந்தபோது தள்ளுவண்டிகளுடன் நடையை கட்டிய வியாபாரிகள். படம் : கே.மணிகண்டன்.
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகக் கூறி, திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்த வஞ்சிபாளையம் பொதுமக்கள்.படம்: என்.அரவிந்த்குமார்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர்.படம்: என்.அரவிந்த்குமார்
தமிழக அரசு, தாய்மார்களின் குழந்தைகளுக்கு பாலுட்ட தனி அறையை கட்டியுள்ளது ஆனால் அது பல இடங்களில் கேட்பாரற்று இது போல் பாதுகாப்பில்லாமல் உள்ளது. இடம்.பட்டினபாக்கம்.படம்.சுரேஷ் கண்ணன்
கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என, கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்.படம்: என்.அரவிந்த்குமார்
விவசாய நிலங்களின் வழியாக மின்சார டவர்லயன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்திய கொங்கு விவசாய கட்சியினர். படம்: என்.அரவிந்த்குமார்.
ஊட்டி அருகே சோலுார் கிராம  படுகரின பெண்கள், டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி , கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டனர்.படம்.ஒய்.ஜே .ரகு.
ஊட்டி அருகே சோலுார் கிராம  படுகரின பெண்கள், டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி , கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டனர்.படம்.ஒய்.ஜே .ரகு.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு தனியார் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படம்:சத்தியசீலன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு தனியார் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படம்:சத்தியசீலன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு தனியார் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படம்:சத்தியசீலன்.
கோவை காருண்யா பல்கலையில் நடந்த கிறுஸ்துமஸ் விழாவில் தீப ஒளி ஏந்தியபடி பாடல்கள் பாடிய மாணவர்கள் . படம் : அருண்குமார்.அ.
கோவை காருண்யா பல்கலையில் நடந்த கிறுஸ்துமஸ் திருவிழா. படம் : அருண்குமார்.அ.
கோவை காருண்யா பல்கலையில் நடந்த கிறுஸ்துமஸ் திருவிழாவில் நடனமாடிய பள்ளி மாணவர்கள். படம் : அருண்குமார்.அ.
பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்த பாரதி திருவிழாவில் பாரதியாரின் 5 ரத்தின பாடல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள்.
என்ன அழகு: பழநி அருகே கோம்பை பட்டி பகுதியில் பூத்துள்ள சூரியகாந்தி பூவில் தேனை உறிஞ்சும் தேனீ. படம் : கே.மணிகண்டன்.
வர்தா புயல் கரையை கடக்கும்போது விழுந்த மரம்.இடம்:மாநில பெண்கள் பள்ளி.எழும்பூர். படம்:சத்தியசீலன்.
வர்தா புயல் கரையை கடக்கும்போதுவிழுந்த மரம்.இடம்:அண்ணா சாலை. படம்:சத்தியசீலன்.
சென்னை புயல் காட்சிகள்....படம் : எல்.முருகராஜ்
வார்த் புயலால் சீறும் அலையும் காற்றும்...படம் எஸ்.ரமேஷ்...வங்கக்கடலில் உருவான வார்த்  புயல் சின்னம் சென்னை வழியாக கடக்கும் நிலையில் சீறும் கடல் அலையும், காற்றும். இடம் திருவொற்றியூர்.
வார்த் புயலால் சீறும் அலையும் காற்றும்...படம் எஸ்.ரமேஷ்...வங்கக்கடலில் உருவான வார்த்  புயல் சின்னம் சென்னை வழியாக கடக்கும் நிலையில் சீறும் கடல் அலையும், காற்றும். இடம் திருவொற்றியூர்.
கார்த்திகை தீபத்தையொட்டி கோவை வெள்ளிங்கிரி மலையில் தீபம் ஏற்ற பேரூர் ஆதினத்திலிருந்து சொக்கப்பனை எடுத்து சென்றனர். படம் : ஆர்.பிரபு.
ஐயப்ப சீசனை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பஞ்சாமிர்த பாட்டில்கள்.படம் : கே.மணிகண்டன்.
ஊட்டி பேருந்து நிலையத்தில் வழக்கம் போல் அரசு பஸ்கள் இயங்கின,பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.படம்.ஒய்.ஜே.ரகு.
ஜெயலலிதாவின் பூத உடலை கடைசியாக காண அ.தி.மு.க தொண்டர்கள், ராஜாஜி அரங்கத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இடம்: அண்ணாசாலை. படம்: காயத்திரி.
பெண் தொண்டர்கள் அழும் காட்சி.. படம் : கிஷன்..
தொண்டர்கள் அழும் காட்சி.. படம் : கிஷன்..
தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம்பெற கோவை ராஜவீதி துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பிரார்த்தனை செய்தனர் படம் : ஆர்.பிரபு.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிட்ட உடன் டென்ஷனில் தொண்டர்கள். படம் : காயத்திரி .
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் போலீசார் குவிந்த வண்ணம் உள்ளனர். படம் : காயத்திரி .
அப்பல்லோ மருத்துவமனையில் அ.தி.மு.க பெண் தொண்டர்கள்.படம் : காயத்திரி .
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்து மருத்துவமனை வந்த அ.தி.மு.க தொண்டர்கள் கிரீம்ஸ் சாலையிலே காத்திருக்கின்றனர். படம் : காயத்திரி .
அப்பல்லோ மருத்துவமனையில் அ.தி.மு.க தொண்டர்கள் மணம் உருகி அழுதனர். படம் : காயத்திரி .
தமிழக முதல்வர் ஜெ., உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ வாசலில் கதறி அழும் பெண் தொண்டர்கள்.
அப்பல்லோ மருத்துவமனையில் பெண் தொண்டர்கள் . படம் : காயத்திரி .
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்து மருத்துவமனை வந்த அ.தி.மு.க தொண்டர்கள் மணம் உருகி அழுதனர். படம் : காயத்திரி .
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்து மருத்துவமனை வந்த அ.தி.மு.க தொண்டர்கள் மணம் உருகி அழுதனர். படம் : காயத்திரி .
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதய கோளாறு மோசமடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பல்லோ வாசலில் அதிமுக தொண்டர்கள் சோகமயத்துடன் விடிய, விடிய இருந்து வருகின்றனர்.
 
Advertisement