Advertisement

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!:

குரங்குகுட்டி ஒன்று லாவகமாக பிடித்து இலக்கை நோக்கி நகர்கிறது. இடம்: கவுகாத்தி, அசாம் மாநிலம்.
மழையில் 'செல்பி' : கொட்டும் மழையும் கடுங்குளிரும் நீலகிரிக்கு சொந்தம் . சுட்டெரிக்கும் வெயிலில் ஓடியவர்கள் தங்களது விடுமுறையை இனிதாக்க, இந்த இனிமையான கால நிலையில் மலை ரயிலில் பயணம் செய்தபடி 'செல்பி' எடுக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் இதிலுள்ள ஆபத்தையும் உணர வேண்டும். இடம்: ஊட்டி - குன்னூர் மலை ஒயில் பாதை லவ்டேல் பகுதி
கோல்கட்டா மார்கெட்டில் கூண்டுக்கிளிகளை பார்வையிடும் சிறுவன்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த தேசிய தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் தேசிய கொடியை குறிக்கும் விதமாக வானில் வண்ணப் பொடியை தூவி பறந்த விமானங்கள்.
கேதார்நாத் யாத்திரை சென்ற ஒரு முதிய பக்தரை மற்றொருவர் தூக்கி செல்லும் காட்சி.
சென்னையில் சில நாட்களாக, மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம்(ஜூலை 11) பெய்த மழையில், தலையை மட்டும் மூடியபடி, லாரியில் செல்லும் கட்டட தொழிலாளர். இடம்: சென்ட்ரல்.
தன் குஞ்சுகள் பசியாற பாசத்துடன் இரை கொடுக்கும் புல்புல் பறவை இடம்: கோல்கட்டா
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, கர்நாடக மாநில போலீஸ் சார்பில், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இடம்: பெங்களூரு.
அனைவரும் கண்டிப்பாக இருக்க வேண்டுமென என்னதான், கர்நாடக சட்டசபை சபாநாயகர் கூறினாலும், ஒருவரும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க, ஆர்வம் காட்டவில்லை. சட்டசபையில் காலியாக இருந்த ஆளும் கூட்டணியின் இருக்கைகள். * சபை நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் தூங்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா*ஏதோ யோசனையில் தன்னந்தனியாக முதல்வர் குமாரசாமி.* இந்த கொடுமையை ஆர்வத்துடன் காணவந்த பள்ளி மாணவியர். இடம்: விதான் சவுதா, பெங்களூரு.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் குழந்தைகள் சிரித்த முகத்துடன் பள்ளிக்கு செல்லும் காட்சி.
கனடாவின் அல்பெர்டா மாகாணம் கல்கேரியில் நடந்த எருது விளையாட்டின் போது அதன் மீது சென்றவர் கீழே விழுந்தார்.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், வன்முறையாளர்களுக்கும் நடந்த மோதலில் போலீசார் ஒருவர் கண்ணீர் புகை குண்டு பிரயோகம் செய்யும் காட்சி.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா உயிரியல் பூங்காவில் வெள்ளை காண்டாமிருகம் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.
அம்மா உடுத்திய சேலையின் மணம்... இன்னும் இன்னும் வேணும்! மீண்டும் குழந்தையாய் பிறக்கும் ஆசையை தூண்டும் இந்த காட்சி காண கிடைத்த இடம்: கோவை இருகூர் சாலையோரம்.
அரிய வகை இனமான வெள்ளை நிற காண்டாமிருகம் ஓய்வு எடுக்கும் இடம் சீனா.
பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக சாலையில் தேங்கிய தண்ணீரில், விளையாடும் சிறுவர்கள்
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் நடுவே, தனது மகளை முதுகில் சுமந்து சாலையை கடக்கும் பாசக்கார தந்தை. இடம்: மும்பை.
ஜில்லென காற்று வீசும் சிம்லாவில் கண்ட ஒரு காட்சி.
டில்லி உயிரியல் பூங்காவில் விளையாடி மகிழ்ந்த வெள்ளை நிற மான்கள்.
என்னதான் நான்கு சக்கர வாகனங்கள் வந்தாலும் குதிரை, வண்டியில் செல்வது ஒரு ஆனந்தம் தான். இடம்: கோவை வேடப்பட்டி ரோடு .
 
Advertisement