Advertisement

தமிழகத்தின் கண்ணாடி:

ஒட்டன்சத்திரம் அருகே சத்திரபட்டி பகுதியில் பூத்துள்ள முருங்கை பூக்கள்.
கோவை சிங்காநல்லூரிலுள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் திருத்தேர் மஹோத்ஸவம் நடந்தது, இதில் அனுமன் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரி வேதபுரிஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியது.
செயல்முறை விளக்கம் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில்சர்வகட்சியினர் முன்னிலையில் புதிய வாக்கு பதிவு இயந்திரம் குறித்து பெல் நிறுவனத்தினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
செம்பாக்கத்தில் உள்ள தாங்கல் ஏரியை அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆசியோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
சிவகங்கையில் மாலை நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தை சூழ்ந்த கருமேகங்கள்.
காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் திருப்பூரில் போராட்டம் நடத்தினர்.
சிங்கம்புணரி அருகே மக்கள் தொடர்பு முகாமிற்கு அரசு பஸ்சில் பத்து அதிகாரிகள் மட்டும் சென்று வந்தனர்.இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம்.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமணை வளாகத்தில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இயக்குனர் விக்கிரமன் திறந்து வைத்தார். உடன் தேசிய சித்தமருத்துவமனையின் இயக்குனர் பானுமதி உள்ளார்
டூவீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும், சரக்கு ஏற்றகூடாது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறி, திருப்பூர் காங்கயம் ரோட்டில் சென்ற வாலிபர்.
முழு நேர அரசு ஊழியர்களாக்குவது உள்பட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி மதுரையில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.
புதுச்சேரி சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சுற்றுலா துறை சார்பில் கிராமிய கலை திருவீதி உலா நடந்தது.
பசுமையின் பின்னணியில் ரம்மியமாக காட்சியளிக்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை.
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் , தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பழநி கோயில் பஞ்சாமிர்த குடோனில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முரளி சங்கர் ஆய்வு செய்தார். இடமிருந்து . தலைமை நீதிபதி நம்பி, இணை ஆனையர் செல்வராஜ்.
அனுமதி கோரி மறியல் : மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதி அளிக்க கோரி விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் பானாம்பட்டு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் 7 வது வார்டில்  குடிநீர் வராததை கண்டித்து  மாநகராட்சி   அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை இல்லாததால் பழநி வரதமாநதி அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போதைய நீர்மட்டம் 50 அடி (மொத்தம் 66.50 அடி).
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்யக்கோரி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
 
Advertisement