Advertisement

ஓடும் நதியிலே,ஆடும் படகிலே தமிழர்களின் தீபாவளித் திருவிழா

சான் ஆண்டோனியோவில் 2018 ன் ஓர் முத்திரை பதித்த தீபாவளித் திருவிழா என்றே இதைச் சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் அனைத்து இந்திய மக்களும் ஒன்று கூடி, நதியிலே, மிதக்கும் படகில் தீபாவளியைக் கொண்டாடுவார்கள். தங்கள் மாநிலத்தின் சிறப்புகளை வடிவமைத்து நமக்கு காண்பிப்பர். அதில் எப்போதும் போல இவ்வருடமும் நவம்பர் 3 ஆம் தேதி, மற்ற மாநிலமக்கள் பொறாமைப் படும்படியாக, ஆச்சரியப் படும்படியாக,தமிழ்நாட்டுப் படகு, தமிழ் நாட்டின் சிறப்புகளை வெளிக்காண்பித்து, அங்கிருந்த அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, ஆரவாரம் செய்யவைத்தது !

மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட பெரிய படகில்,'மதுர குலுங்க குலுங்க ,புழுதி பறக்க,பறக்க நீ போடாத ஆட்டம் போடு' பாடல் அதிர, அடுத்து வரப்போவது 'தமிழ் நாடு' என ஒலிபெருக்கியில் தெரிவித்தவுடன்,'பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல' என்பதற்கு ஏற்ப, தவில், ஆர்மோனியம், நாதஸ்வர இசைக்கச்சேரிகள் இசையமைக்க, கரகாட்டமும், ஒயிலாட்டமும், பொய்க்கால் குதிரையாட்டமும் , புலியாட்டமும் , மயிலாட்டமும் ,தப்பாட்டமும் ஆடி வர,, அடடா ,காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஏனெனில் மற்ற மாநிலப் படகுகளில் கைகளை மட்டுமே ஆட்டியபடி வந்துகொண்டிருக்கையில் இப்படி ஓர் ஆரவாரத்தை எதிர்பார்க்காத பிற மக்கள் அடைத்த உற்சாகம் அளவில்லாதது !'தமிழன்டா ' என நிரூபித்துவிட்டார்கள்.


இந்தியர்கள், அமெரிக்கர்கள், ஸ்பானிஷ் மக்கள் என வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வைரயாளர்கள்,எழுப்பிய ஆரவாரச் சத்தம் மேலும் இவர்களை உற்சாகப் படுத்தியது. படகுவலம் முடிந்ததும் அங்கேயே மேடையில் அனைவரது ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளும் நடந்தது. இம்முறை மோகன் தாமோதரன் 'வனவிலங்குகளைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் ஓர் நிகழ்ச்சி அமைத்திருந்தார்.


முதலில் குறத்தி நடனத்தில் தொடங்கி, பாம்பாட்டம்,மயிலாட்டம், ஒயிலாட்டம் என ஆடி அரங்கத்தையே அதிரவைத்தனர்., ஹை லைட்டாக 'தெருக்கூத்து' அமைந்தது. இதில் வாசுவின் பங்கு சிறப்பானது.

தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை மேன்மையுடன் வழங்கியதில் நம் தமிழருக்கே பெருமை சேர்த்தனர் சான் ஆண்டோனியோ தமிழ் மக்கள் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement