Advertisement

பிரான்சில் இந்திய கலாச்சாரம் காக்க ஒரு கூட்டம்

பிரான்சில் பாரிஸுக்கு அருகில் உள்ள கிரங்கிநகரில் அமைத்துள்ள இந்தோபிரான்ஸ் கலை மற்றும் கலாச்சார தமிழ்சங்கம் மற்றும் கெட்டிமேளம் சங்கம் இணைந்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. தற்போது பிரான்ஸ் நாட்டில் புதுச்சேரி மற்றும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் நமது தமிழ் கலாச்சாரம் கூடிய பிள்ளைகள் அதிகமாக வளர்ந்து அவர்களின் எதிர்கால வாழ்கையை அமைத்து கொடுப்பதில் பெற்றோரின் பங்கும் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவ இந்த கூட்டம் துணையாக இருக்கும் என்று கிரிங்கி சங்கத்தின் தலைவர்ஜனார்த்னி பரந்தாமன் தமது வரவேற்புரையில்கூறினார்.
அடுத்து இச்சங்கத்தின் துணைதலைவர் ஜெயபிரகாசம், கெட்டிமேளம் சங்கத்தின் தலைவர் மதியழகனை யாவருக்கும் அறிமுகப்படுத்தினார். அவர் கெட்டிமேளம் சங்கத்தின் முக்கிய பணிகள் பற்றி வந்தவர்களுக்கு விளக்கியபின் மணமகள், மணமகன் தேடுபவர்களுக்கு விண்ணப்பபடிவம் விநியோகிக்கப்பட்டது. அவரவர் தேடுததலுக்கு ஏற்ப படிவங்களை நிரப்பி சிறிது நேரத்திற்குபின் படிவங்களின்படி பெண், ஆண்களின் பெற்றோர்கள் அறிமுகம் நடைபெற்றது. யாவரும் அவரவர்களின் தேடல்பற்றி மேடையில் பேசினார்கள். அரங்கில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தேநீர் இடைவேளையின்போதே சிலர் தங்களின் தேடலுக்கு பலன் கிடைத்தது என்றால் மிகையாகாது.
- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement