Advertisement

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

ஷார்ஜா : ஷார்ஜாவில் நடைபெற்று வரும் 37 வது சர்வதேச புத்த கண்காட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி. மு. க மாநில மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி 02.11.2018 வெள்ளிக்கிழமை மாலை கலந்து கொண்டார்.
இந்த புத்தக கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா உள்ளிட்ட 77 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த ஆண்டு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) புத்தக கண்காட்சியில் முதன் முறையாக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சிறந்த முறையில் கலாச்சார மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை செய்ததற்காக ஷார்ஜா அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த அழைப்பை ஏற்று கனிமொழி எம்.பி வருகை புரிந்தார்.

முதலில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன் பிறகு மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார்.
அமீரக தி.மு.க தலைவர் திருச்சி அன்வர் அலி வரவேற்புரை வழங்கினார்.
அதன் பின் கனிமொழி சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து பேசினார். கலைஞரிடம் புத்தகங்களை பரிசாக கொடுத்தால் ஒரு குழந்தையை போல் பெற்றுக் கொள்ளும் பாங்கு குறித்து விவரித்தார். தமிழ் மொழிக்கு சிறப்பான வாய்ப்பை வழங்கி வரும் ஷார்ஜா அரசுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
பழஞ்சூர் செல்வம் நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் அவர் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் புத்தக நிறுவனங்களை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளரும், துபாய் எவர்கோல்டு குழுமத்தின் மேலாண்மை இயக்குநருமான பழஞ்சூர் கே. செல்வம், அமீரக திமுக தலைவர் திருச்சி அன்வர் அலி, ஹமத் குழுமத்தின் இயக்குனர் ஹமத் அல் ஹம்மாதி, கல்லிடைக்குறிச்சி முகைதீன், அல் ரீம் குழுமத்தின் தலைவர் இளையான்குடி அபுதாஹிர், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement