Advertisement

பஹ்ரைனில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தின கொண்டாட்டம்

மனாமா: இந்திய சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்த தினம் இந்திய தூதரக வளாகத்தில் ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. பஹ்ரைனுக்கான இந்திய தூதர் ஆலோக் குமார் சின்ஹா கலந்துகொண்டு ஒற்றுமை தின உரை நிகழ்த்தினார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பற்றிய புகைப்பட தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்திய குழந்தைகள் பல்வேறு கலை நிகழ்சிகளை நடத்தினர். பஹ்ரைனில் உள்ள பல்வேறு இந்திய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement