Advertisement

லேகோஸ் நகரில் குரு பெயர்ச்சி வழிபாடு

லேகோஸ் : அக்.,04 அன்று இந்திய நேரப்படி இரவு 11:05 மணிஅளவில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி நைஜீரியாவின் லேகோஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் அக்.,05 அன்று காலை 6 மணி அளவில் குரு சாந்தி ஹோமம் துவங்கியது. இதனை அடுத்து நவக்கிரக குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனையுடன் வழிபாடு முடிய, பரிகாரம் செய்ய நாள் முழுவதும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல் இந்த குருபெயர்ச்சியால் நல்ல பலன்கள் பெற பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.
- லேகோசில் இருந்து ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement