Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீ நடராஜர் உற்சவம்

சிங்கப்பூர் : பொற்சபையில் திருநடனம் புரியும் மன்னவராம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி சதுர்த்தசியில் நடராஜர் உற்சவம் சிங்கப்பூர் - சிலோன் சாலை அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி தேவர்களின் அர்த்த சாமப் பூஜையாகக் கருதப்படுகிறது. சங்கல்பம் , கும்ப பூசை , ஹோமம் முதலியவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமுறை பாராயணத்துடன் நடராஜப் பெருமானுக்கு விசேஷ திரவிய அபிஷேகம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஸ்ரீ சிவகாமி உடனமர் ஸ்ரீ நடராஜர் உற்சவத்தில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய ஓதுவா மூர்த்திகளின் திருமுறைப் பாராயணம் தேனென இனித்தது.
- சிங்கப்பூரிலிருந்து வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement