Advertisement

இலண்டனில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா

இலண்டனில் ஈஸ்ட்ஹாம் என்ற இடத்தில் அமைந்துள்ள ‘ட்ரினிட்டி மையம்’ என்ற இடத்தில் ச.பொன்ராஜின் 2 தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டன. பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் நூலை வெளியிட தமிழ்; மொழிக் கழக இயக்குநர் சிவாபிள்ளை பெற்றுக் கொண்டார். நூல் ஆசிரியர் தமது படைப்பான இரண்டு நூல்களின் விவரம் பற்றிக் குறிப்பிட்டதோடு நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கியவர்கள் மற்றும் நூலின் ஆக்கப்பணிக்கு தனக்கு உதவியாய் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
இந்த நிகழ்சியின் போது இங்கிலாந்து பயணமும் பார்வையும் என்ற நூலும், அப்பர் வாழ்வியலும் தேவாரத் திருத்தலங்களின் தரிசனமும் என்ற நூலும் வெளியிடப்பட்டன. பேராசிரியர் பேசும் போது நூலின் சிறப்புகள் பற்றியும் ஆசிரியர் பற்றியும் மிக விளக்கமாக எடுத்துக் கூறியது மட்டுமின்றி ‘உறவுகள் மேம்பட’ என்ற தலைப்பில் சிறப்புரையும் ஆற்றினார். இவரது உரையாற்றல் மக்கள் அனைவரையும் கவர்ந்தது.

இவ்விழாவிற்கு சிவாபிள்ளை தலைமை தாங்கினார். தமிழக முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொருளாளர் கோவிந்தராசன் வரவேற்புரை நல்கினார். பூபதி இராஜா இறுதியில் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியின் போது சிறிய தேனீர் விருந்தும் நடைபெற்றது.

- தினமலர் வாசகி பவித்ரா பொன்ராஜ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement