Advertisement

சான் ஆண்டோனியோவில் 'அஸார்- டிஎஸ்கே' புயல்; மகிழ்ச்சி வெள்ளத்தில் தமிழர்கள்

அக்டோபர் 7 ஆம் தேதி, சான் ஆண்டோனியோவை சந்தோஷப் பெருவெள்ளம் மூழ்கடித்தது அஸார் - டிஎஸ்கே புயலால் ! முதல் நாள் தான், இந்தியாவிலிருந்து 26 மணிநேரங்கள் பயணம் செய்துவந்த களைப்பே தெரியவில்லை ! அத்தனை எனர்ஜி !

அஸார்- டிஎஸ்கே வைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நிறைய சாதனைகள். Youtube ல் தேடினால் எண்ணிலடங்கா வீடியோக்கள் உள்ளன. சமீபத்திய சாதனை என்றால் விஜய் டிவியின் ' கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் ஜோடி வெற்றியாளர்கள் !

அன்று நிகழ்ச்சி மாலை 5:30 மணிக்கு ஆரம்பித்ததிலிருந்து, இரவு 8:00 மணிவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல், தொடர்ச்சியாக அத்தனை ஹீரோக்களின் குரல்களில் பேசி அசத்தி, அவர்கள் சொன்ன வசனங்களையே நகைச்சுவையாக சிறிது மாற்றி அமைத்து "அட,, இது நல்லாயிருக்கே" என நம்மை ரசிக்கவைத்து, பார்வையாளர்களை ஒரு நொடி கூட சோர்வடைய விடாமல், அனைவரது வயிறும் வலிக்க, விடாமல் தட்டிய கைகளும் அசந்து போக, சின்னக் குழந்தைகளில் இருந்து, பெரியவர்கள் வரை அவர்களது உடல்மொழிகளைக் கண்டு சிரிக்க வைத்து, மிகப் பெரிய மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினர் !

அந்த இளைஞர்களின் எனர்ஜி அனைவரையும் தொற்றிக் கொண்டது. யார் பெஸ்ட் என்ற சொல்லுக்கே இடமில்லை. அத்தனை கச்சிதமாக மாறிமாறி அசத்தினர் அஸாரும் டிஎஸ்கேயும் !

அவர்கள் அசத்திய இன்னும் பல திறமைகளை நான் இப்போது வெளிப்படுத்த இயலாது, ஏனெனில் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த இருக்கின்றனர். அதனால் Youtube ல் வரும்போது பார்த்து மகிழுங்கள் !

இவர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து பெருமை சேர்த்தது UB6 மீடியா ! இம்மீடியாவின் கிரியேட்டிவ் ஹெட் விஜய் மணிவேலுக்கும், சுரேஷ்குமாருக்கும் மிக்க நன்றி !

சான் ஆண்டோனியோவில் ஏற்பாடு செய்த தமிழ் சங்கத் தலைவர் இராஜகுரு மற்றும் செயலாளர் கார்த்திகேயனுக்கு அனைவரது சார்பாக நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- சான் ஆண்டோனியோவிலிருந்து ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement