Advertisement

டல்லாஸில் ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை இரவு

டல்லாஸ் கர்ட்டஸ் கல்வெல் சென்டரில் மியூசிக் மேஸ்ட்ரோ இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை இரவு செப்டம்பர் 8 ஆம் தேதி மிகப் பிரமாதமாக நடந்தது. நம்மில் பலர் ஏ ஆர் ஆரின் வெறியர்கள் என்றே சொல்லலாம்,,அப்படியிருக்க, நம் கண்முன்னே நமக்காக இசை இசைத்து,பாடவும் வருகிற ார் என்றால்,, கண்ணா லட்டு திங்க ஆசை வராதா என்ன ?!

ஒரு திருவிழா உற்சாகத்துடன் பார்வையாளர்கள் அரங்கத்தின் உள்ளே அமர, ஏ ஆர் ஆர், தங்கள் குழுவுடன் ( மனோ, உதித் நாராயண்,ஹரிச்சரண்,ஜாவித் அலி,ரஞ்சித் ப்ரோட்,நீத்தி மோகன்,ஜனிடா காந்தி மற்றும் லிண்டா ) இசை அரங்கேற்றியது, வயது வித்தியாசமின்றி வந்திருந்த அனைவரையும் புல்லரிக்க வைத்தது !

சில பாடல்கள் அரங்கத்தையே அமைதியாகியது, பல பாடல்கள் இளைஞர்களை உட்காரவிடாமல் துள்ளிக் குதிக்க வைத்தது ! திரையில் பார்த்து ரசித்த அத்தனைப் பாடல்களையும் அந்த மேடையில் அதே சப்தத்தில் கொஞ்சமும் குறையில்லாமல் கொடுத்ததற்கு 'ஹாட்ஸ் ஆப்' ரஹ்மான்ஜி ! சான் ஆண்டோனியோவிலிருந்து பலர் சென்று அந்த இசைமழையில் நனைந்து வந்தனர். மனம் குளிர்ந்தும் வந்தனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று படைப் பதால் தானோ என்னவோ, இறைவன் ரஹ்மானுக்கு மேலும் மேலும் புகழ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் !

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement