Advertisement

சிங்கப்பூரில் கதைக்களம்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கதைக் களம் நிகழ்ச்சி கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. “ கதை சொல்லு “ என்ற புதிய அங்கம் இம்மாதம் இடம் பெற்றது. இதில் தொடக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி அப்ரமேயா தான் எழுதிய கதையை அற்புதமாகப் படித்து அசத்தினார்.

இம்மாதப் பரிசுக்குரிய கதையைத் தமிழ்ச்செல்வியும் கதை விமர்சனத்தை கீழை அ.கதிர்வேலுவும் வாசித்தனர். கதை விமர்சனம் செய்வது எப்படி என சியாம் குமார் விளக்கினார். சிங்கை எழுத்தாளர்கள் என்ற அங்கத்தை மலையரசி வழிநடத்தினார். இதில் கவிஞர் ராம.வைரவன் படைப்புக்களைப் பற்றி அழகு சுந்தரம் எடுத்துரைத்தார்.

“ கண்டதும் கேட்டதும் கதையாகும் “ என்ற தலைப்பில் மேனாள் வாணொலிப் படைப்பாளர் மீனாட்சி சபாபதி சிறப்புரை ஆற்றினார். இம்மாத சிறுகதைப் போட்டியில் மலையரசி முதற் பரிசும் சியாம் குமார் இரண்டாவது பரிசும் மணிமாலா மூன்றாவது பரிசும் பெற்றனர். சிறந்த கதை விமர்சனத்திற்கான முதற்பரிசு மணிமாலாவுக்கும் இரண்டாவது பரிசு மலையரசிக்கும் கிடைத்தன.

கதைக்களப் பொறுப்பாளர் – துணைச்செயலாளர் கிருத்திகா முன்னதாக வரவேற்று நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement