Advertisement

சிகாகோவில் விவேகானந்தர் சிலை திறப்பு

சிகாகோ: சிகாகோ நகரில் 125 ஆண்டுகளுக்கு முன் உலக மத பார்லிமென்டில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்பு மிகு உரையை நினைவு கூரும் வகையில், சிகாகோவில் நடைபெற்ற 2018 ம் ஆண்டிற்கான உலக இந்து மாநாட்டில், விவேகானந்தரின் சிலை திறந்து வைக்கப்பட்டது

விவேகானந்தர் உரையாற்றிய செப்டம்பர் 11 ம் தேதியை சுவாமி விவேகானந்தர் தினமாக இல்லினாய் மாகாண கவர்னர் அறிவித்தார் இல்லினாய்ஸ் பிரதிநிதிகள் சபை சார்பில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குறித்தும் விவேகானந்தர் குறித்தும் உரையாற்றினார்


3 நாள் நடைபெற்ற சிகாகோ உலக இந்து மாநாட்டில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் அரசியல், பொருளாதாரம், இளைஞர்கள், பெண்கள், கல்வி, ஊடகம், இந்து அமைப்புகள் என்ற 7 வெவ்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன


- தினமலர் வாசகர் சித்ரா சிவகுமார்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement