Advertisement

இரட்டை கோபுர இடிபாடு பகுதியில்...

நியூயார்க்: 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி நியூயார்க் நகரில் உயரமான இரட்டை கோபுரங்கள், தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதை உலகில் எவரும் மறந்திருக்க முடியாது அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலை,17 ஆண்டுகளாகியும் இன்றும் நினைவு கூரும் வகையில், அந்த இடிபாடு பகுதியை, செப்டம்பர் மாதம் 2 ம் வாரம் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் சென்று பார்த்து வருகின்றனர்


இந்த ஆண்டும் நாள் முழுவதும் மழையும் குளிரும் நிலவிய நிலையிலும் ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்திற்கு சென்று தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்



இந்த கோரத்தாக்குதலில் இறந்த இந்தியர்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டு, பயங்கரவாதிகளின் கொடூரத்திற்கு சாட்சியாக காட்சி அளிக்கிறது



உலகில் அமைதி நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த இடிபாடு பகுதி காட்சி அளிக்கிறது அமைதியா பயங்கரவாதமா எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்



- தினமலர் வாசகர் சித்ரா சிவகுமார்







Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venu - Chennai,இந்தியா

    ( தவறைச் சுட்டிக் காட்டியதற்காக நன்றி. சரி செய்யப்பட,டு விட,டது)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement