Advertisement

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

தமிழ் நாடு-நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கண்ணி அனைவரும் அறிந்ததே. செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த மாதா திருவிழா, அங்கு மட்டுமல்ல உலகமெங்கும் கிருத்துவ பெருமக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெக்சாஸ் மாநிலம் சான் ஆண்டோனியோவிலும் இங்குள்ள அன்பர்களால் முறைப்படி மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அதனைப் பற்றி சில வரிகள்.

அமெரிக்காவாழ் தென்னிந்திய பாதிரிமார்கள், அருட் சகோதர,சகோதரிகள் மற்றும் பொது மக்கள் கூடி, தமிழில் பாடல் திருப்பலியும், அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தி வெகு விமரிசையாகக் கொண்டாடினர். தமிழ் கலாச்சார முறைப்படி திருப்பலிக்கு முன்பு, பாதிரிமார்களை ஆரத்தி எடுத்து வரவேற்றும், பாதிரிமார்கள் பொதுமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றும், திருப்பலியின் நடுவே சிறுமியர் மலர், தூப, தீப அஞ்சலி எடுத்தும், திருப்பலிக்கு சிறப்பு சேர்த்த விதம், அங்கு வந்திருந்த பல அமெரிக்கர்களைக் கவர்ந்தது !

திருப்பலிக்குப் பின்பு, வேளாங்கண்ணி மாதாவின் தேர் பவனியில் மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் கலந்துகொண்டு,ஜெபமாலை சொல்லியபடி மரியாளின் புகழ் பாடிச் சென்றனர். இறுதியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்பு மாலை சிற்றுண்டியுடன் மாதாவின் ஆசிர்வாதமும் கிட்ட, இவ்விழா இனிதே நிறைவுற்றது !


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement