Advertisement

சிங்கப்பூரில் ஒலி வட்டு வெளியீட்டு விழா

‘ வாழ்வதற்குப் பொருள் தேடுவோம் – பொருள் தேடுவதற்காக வாழ வேண்டாம் “ என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு – கலைக்கூடம் தயாரிப்பில் முருகா எழுதிய இயக்கியுள்ள “ டுவிங்கில் டுவிங்கில் லிட்டில் ஸ்டார்ஸ் “ திரைப்பட ஒலி வட்டு வெளியீட்டு விழா ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் கண்ணனைக் கதாநாயகனாகக் கொண்டு 22 குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் நடித்துள்ளனர். இதில் காணப்படும் 12 நிமிட நாடகம் முத்தாய்ப்பாக உள்ளது. தமிழில் பேசவும் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவுமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியது. காதல் காட்சிகளோ விரச வசனங்களோ இல்லாத குடும்பத்தார் அனைவரும் அமர்ந்து காணும் படமாக உள்ளது.


கவிமாலைக் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகன் பட விமர்சன உரை நிகழ்த்தினார். சிங்கப்பூர்ப் பட்டி மன்ற புகழ் மன்னை ராஜகோபாலன் வாழ்த்துரை ஆற்றினார். முதல் ஒலி வட்டை கலையரசன் வெளியிட மருத்துவர் மோகன் ரூபன் முதற் படியைப் பெற்றுக் கொண்டார். இரண்டாவது ஒலி வட்டை ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவரும் சிங்கப்பூர் இலங்கைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவருமான கி..நரசிங்கன் வெளியிட சசிக்குமார் படியைப் பெற்றுக் கொண்டார். மூன்றாவது ஒலி வட்டு கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இறை.மதியழகனால் வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன் அவ்வொலி வட்டைப் பெற்றுக் கொண்டார். முன்னதாக மகாலட்சுமி உமாபதி வரவேற்புரை நிகழ்த்தினார். அபிராமி சண்முகம் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.


நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்




Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement