Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை விழா

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி 375 ஆவது ஆராதனை விழாவும் ஸ்ரீ மகா சுதர்சன தனகார்ஷண குபேர லட்சுமி யாகமும் இரு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை வழிபாடு சங்கல்பம் – விசேஷ திருமஞ்சனம் – பக்தர்களின் பால் குட அபிஷேகம் – சிறப்பு பூஜையோடு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று ஸ்ரீ பிரகலாதர் புறப்பாடு மிகச் சிறப்பாக நிறைவு பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.


ஸ்ரீ மகா லட்சுமி சுதர்ஸன தனாகர்ஷண குபேர லட்சுமி யாகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மகா சுதர்ஸன குபேர லட்சுமி யாகம் – ஸ்ரீ லட்சுமி குபேர தனாகர்ஷன யந்திர பூஜை – மகா சுதர்ஸன தனாகர்ஷண குபேர லட்சுமி யாகம் ஆகியவை கோலாகலமாக நடைபெற்றன. அடுத்து கோ மாதா பூஜையும் சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றன. நிறைவாக ஸ்ரீ சீதா ராம சகஸ்ர நாம அர்ச்சனைக்குப் பின் மகா தீபாராதனையும் பக்தர்களுக்குப் பிரசாதமும் வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது. ஆலய மேலாண்மைக் குழுவினரும் தலைமை அர்ச்சகர் அம்மன்குடி சீனிவாச பட்டாச்சார் தலைமையிலான அர்ச்சகர்களும் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.


நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement