Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மஹோத்சவம்

சிங்கப்பூர் வாட்டர்லூ தெரு ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி மஹோத்சவம் செப்டம்பர் முதல் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் நாள் அனைத்துப் பரிவார தெய்வங்களுக்கும் திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இரண்டாம் தேதி காலை ஸ்ரீ பஞ்ச சூக்த ஹோமத்திற்குப் பின் திரளான பக்தர்கள் பரவசத்தோடு பால்குடம் ஏந்தி ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர்.

தொடர்ந்து ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு விசேஷ ஜெயந்தி பூஜை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் பக்தர்களின் சீர் வரிசை – கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று ஜனன பூஜை துவங்கி பால கிருஷ்ணனுக்கு வெண்ணைய் ஊட்டுதல் நிகழ்ச்சி மெய் சிலிர்க்க வைத்தது. 13 ஆம் தேதி வரை நடைபெறும் இம் மஹோத்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அருள் பாலிப்பார்.

முதல் நாள் ஆலிலை கிருஷ்ணன் அலங்காரத்திலும் இரண்டாம் நாள் உறியடியும் மூன்றாம் நாள் கோவர்தன கிரிதாரி கிருஷ்ணனாகவும் நான்காம் நாள் ஸ்ரீ லட்சுமி நாராயணனாகவும் ஐந்தாம் நாள் ஸ்ரீ பட்டாபி ராமராகவும் – ஆறாம் நாள் காளிங்க நர்த்தனராகவும் ஏழாம் நாள் பரமபத நாதனாகவும் – எட்டாம் நாள் வெண்ணைய்த் தாழி கண்ணனாகவும் அருள்பாலித்து ஒன்பதாம் நாள் திருக்கல்யாண அலங்காரத்தில் ஜொலிப்பார்.

நிறைவாக சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ருக்மணி சமேதராக ஸ்ரீ கிருஷ்ண பகவான் வெள்ளி ரதத்தில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிக்க மஹோத்சவம் முழுமை பெறும்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement