Advertisement

தஸ்லீமின் ‘ஆயுதம்’ குறும்படத்துக்கு ஒமான்-இந்தியா குறும்பட விருது.

மஸ்கட்: பல குறும்பட விருதுகளைப் பெற்ற தஸ்லீம்கானின் ‘ஆயுதம்’ ‘குறும்படம்’ சென்ற வெள்ளியன்று நடைபெற்ற ஒமான்-இந்தியா குறும்பட விருது விழாவில் சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்றது.


மொத்தம் 32 படங்கள் போட்டியில் பங்கேற்றன. போட்டியின் நடுவராக இந்தியாவிலிருந்து வந்து கலந்துகொண்ட டைரக்டர் ராஜசேனன் ஆயுதம் படத்தின் எல்லா அம்சங்களையும் வெகுவாகப் பாராட்டினார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒமானில் படமாக்கப்பட்டது.


தமிழரான தஸ்லீம்கானின் முந்தைய படங்களும் பல்வேறு சர்வதேச விருதுகளையும், நார்வே, மஸ்கட், தாதாசாகப் பால்கே திரைப்பட விழா உட்பட பல விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.






---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement