Advertisement

கேரள மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு, நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (கே-டிக்), குவைத் வாழ் தமிழர்கள் இரண்டு மணி நேரத்திற்குள் அள்ளி வழங்கிய ஒரு இலட்சம் இந்திய ரூபாயை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிடம் ஒப்படைத்தது.
நம் குவைத் வாழ் தமிழ் சகோதரர்களின் கொடையுள்ளம் பார்போற்றத் தக்கது. நிறைவான உதவியைத் தாராளமாக வழங்கிய பெருமக்களுக்கும், அதற்காக முன் நின்று உழைத்த சகோதர, சகோதரிகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இவர்கள் அனைவருக்கும், இனியும் உதவிகளை வழங்க இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் அருளாளன் அல்லாஹ் வளமான வாழ்க்கையை இம்மையிலும், சுகந்த சுவனத்தை மறுமையிலும் அருளி, பிரதிபலன் வழங்குவானாக!
https://m.facebook.com/story.php?story_fbid=2190516837688806&id=365350416872133
நன்றி! வஸ்ஸலாம்.
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)+965 9787 2482www.k-tic.com- குவைத்திலிருந்து பறங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement