Advertisement

துபாயில் அமீரக திமுகவின் சார்பில் இரங்கல் கூட்டம்

துபாய் : அமீரக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துபாயில் தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கலைஞர் மு கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு அமீரக திமுகவின் செயலாளர் பாவை அனீபா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் கலைஞர் அவர்களின் சிறப்பியல்புகளை பட்டியலிட்டார். கலைஞரின் இழப்பு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு என குறிப்பிட்டார்.

ஈமான் கல்சுரல் செண்டரின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் பலர் பங்கேற்றனர். அமீரக திமுக தலைவர் திருச்சி அன்வர் அலி வழிகாட்டுதலின் பேரில் இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் சிறப்புடன் செய்யப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement