Advertisement

சிங்கப்பூரில் கதைக்களம்




சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கதைக் களம் நிகழ்வு கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. கனடாவைச் சேர்ந்த இணைப் போராசிரியர் சேரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்குத் தலைவர் நா.ஆண்டியப்பன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசளித்து கௌரவித்தார். கனடா நாட்டு அரசு தமி்ழ் மொழிக்குச் செய்து வரும் உதவியையும் ஆதரவையும் சேரன் பட்டியலிட்டு தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைத்தார். முதல் அங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை – விமர்சனம் மற்றும் மாணவர் சிறுகதைகள் வாசிக்கப்பட்டன. மாணவர் பிரிவில் எழுதிய காவ்யா தனது படைப்பினை மிகச் சிறப்பாக வாசித்து கரவொலி பெற்றார். அடுத்துப் படைத்த ரிஜீதா முன்னவருக்குச் சளைக்காதவாறு சாதித்துக் காட்டினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் சேரன் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். துணைச் செயலாளர் கிருத்திகா சிறப்பாக நெறிப்படுத்தினார் . மலையரசி படைப்பாளர்களை ஊக்குவித்துப் பாராட்டினார். வளர்ந்து வரும் படைப்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த களமாக அமைந்துள்ளது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது.


- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement