Advertisement

தோஹாவில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் பி. குமரன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பின்னர் இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையை வாசித்தார்.

இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் தேச பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இந்த விழாவில் இந்திய சமூகத்தினர் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதுமட்டுமல்லாது கத்தார் நாட்டின் அனைத்து இந்திய சங்கங்களிலும், 14 இந்திய பள்ளிக் கூடங்களிலும் சுதந்திர தின விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement