Advertisement

சீயாட்டெல் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆடி கிருத்திகை விழா

சீயாட்டெல், வாஷிங்டன்: அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான வாஷிங்டனின் போத்தல் நகரில் அமைந்துள்ள ஹிந்து ஆலயம் மற்றும் கலாச்சார மையத்தில் ஆகஸ்ட் 2018, 5 ஆம் தேதி ஞாயிறு அன்று ஆடி கிருத்திகை விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பால் குடம், காவடி மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி தேர் ஊர்வலம் இடம் பெற்று இருந்தது. கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி விழா குழுவினரால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. விழாவில் நகரின் பல பகுதிகளிலும் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். Hindu Temple & Cultural Center 3818 212th ST SE, Bothell WA- தினமலர் வாசகர் நாகராஜன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement