Advertisement

ஹாங்காங்கில் ஆடிவெள்ளி விழா

ஹாங்காங் : ஹாங்காங்கின் துங் சுங் நகரில் ஆகஸ்ட் 3 ம் தேதி ஆடிப்பெருக்கு மற்றும் ஆடவெள்ளி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாமம் பாராயணத்துடன், ஏராளமான தேவி பஜனைகளும் இசைக்கப்பட்டது. லலிதா சகஸ்ரநாம பாராயண குழுவால் துங் சுங்கில் உள்ள ரவி-சுகுனா இல்லத்தில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது.
- தினமலர் செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement