Advertisement

கருணாநிதி மறைவுக்கு குவைத்தில் இரங்கல்

குவைத் : திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரங்கல் செய்தியில், மாநில சிறுபான்மையினர் நல வாரியம் அமைத்தவர். சிறுபான்மை இயக்குநரகம் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கென்று தனியாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தவர். தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறமையும் மிக்கவர். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, வெற்றிக்கரமாக நடத்திக் காட்டியவர்.அவரை இழந்து தவிக்கும் திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- தினமலர் வாசகர் முஹம்மது மீராஷா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement