Advertisement

சிங்கப்பூரில் பொன்விழா மலர் வெளியீடு

சிங்கப்பூர் : சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் துணைச் செயலாளர் கவிஞர் தியாக.ரமேஷ் தமது பொன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார். அவரைப் பாராட்டி வாழ்த்துமுகமாக ஆகஸ்டு 5 ஆம் தேதி ஆனந்த பவன் உணவக வளாக அரங்கில் பாராட்டு விழாவும் பொன் விழா மலர் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. வைஷ்ணவியின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. தமிழறிஞர் சுப.திண்ணப்பன் தலைமை வகித்தார். சிங்கப்பூர் என்.டி.யூ.சி அமைப்பின் துணைத் தலைவர் கி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தியாக ரமேஷின் சேவையைப் பாராட்டிப் பலர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய அழகிய பொன் விழா மலரை வெளியிட்ட சிறப்பு விருந்தினர் கார்த்திகேயன் திரை இசை வாழ்த்துப் பாடல்களைப் பாடி அசத்தினார். முதல் பிரதியைத் தொழிலதிபர் ஜோதி மாணிக்க வாசகம் பெற்றுக் கொள்ளத் தொடர்ந்து தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் அணிவகுத்து வந்து பெற்றுக் கொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் , வாசகர் வட்ட அமைப்பாளர் சித்ரா ரமேஷ் , புதிய நிலா ஆசிரியர் மு.ஜஹாங்கிர் முதலியோர் வாழ்த்துரை வழங்கினர் கவிமாலை அமைப்பின் சார்பாக அதன் நிறுவனர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ , நிர்வாகத் தலைவர் கவிஞர் இறை.மதியழகன் ஆகியோர் பொன் விழாத் தம்பதிகளுக்கு மாலையிட்டு வாழ்த்தினர். நிறைவாக மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் உலக சமாதான ஆலய மரபுப்படி இறையுணர்வோடு நல்லாசி வழங்கி வாழ்த்தினார் . பலத்த கரவொலிக்கிடையே தம்பதி சமேதராக பொன் விழாத் தம்பதியருக்கு அவர்கள் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் தொலைபேசிவழி பொன்விழாத் தம்பதியருக்கு நல்லருளாசி வழங்கினார். கவிமாலைக் காப்பாளர் மூத்த கவிஞர் மா.அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் ந.வீ.விஜயபாரதி நிகழ்வினைக் கவிநயத்தோடு நெறிப்படுத்தினார்.
- நமது செய்தியாளர்: வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement