Advertisement

பிட்ஸ்பர்க் நகரில் ஆச்சார்யர் ஶ்ரீ வேதாந்த தேசிகரின் 750வது திருநக்ஷத்திரம் கொண்டாட்டம்.

வைணவ முதன்மை ஆச்சார்யர் ஶ்ரீ வேதாந்த தேசிகர் அவர்களின் 750வது வருட பிறந்த நாள் புரட்டாசி மாதம் திருவோண திருநட்சத்திரத்தில் உலகமெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாகபிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஷ்வரா கோவில் வளாகத்தில் ஶ்ரீ இராமாநுஜ சித்தாந்த நிர்தாரண குழுவினரால் ஶ்ரீ அஹோபில மடம் ஆச்சார்யர்கள் ஆசிகளுடன் ஒரு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்த பாசுரங்களான திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, ஶ்ரீ ஆண்டாளின் திருப்பாவை, மற்ற மங்களாசாஸன பாசுரங்கள், கோயில் திருவாய்மொழி, இராமானுஜ நூற்றந்தாதி, தேசிக ப்ரபந்தம், வேத பாராயணம், பெரிய சாற்றுமுறை பாசுரங்கள் அஹோபில மடம் சம்பிரதாய முறைப்படி சேவிக்கப்பட்டது.

பிறகு 46ஆம் பட்டம் ஜீயர் மற்றும் பிரபல வித்வான்களின் உபந்யாச காணொலியும் ஒளிப்பரப்பப் பட்டது. சின்சினாட்டி நகரின் பிரசித்தி பெற்ற வைணவர் ஶ்ரீ இராஜகோபாலன் சுவாமி, ஶ்ரீ தேசிகரின் வைபவங்கள் பற்றி ஒரு உபந்யாசம் செய்தார். அவரைத் தொடர்ந்து அதே நகரை சேர்ந்த சிறுமியர்கள் ஸ்ருதி மற்றும் ஶ்ரீயா, சுவாமி தேசிகரின் பெருமைகளை கர்னாடக இசையை தழுவிய தமிழ் பாடலாக பாடினர். மேலும் இதில் வட அமெரிக்காவின் மற்ற நகரங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து, உள்ளூர் மக்களுடன் சேர்ந்து பாராயணத்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குழந்தைகள் உட்பட அனைவரும் தமிழ் வழக்கப்படி தரையில் அமர்ந்து வாழை இலையில் பிரசாதம் உண்டனர். இவ்விழா ஶ்ரீ வேதாந்த தேசிகரின் மங்களத்துடன் இனிதே நிறைவுப் பெற்றது.


— தினமலர் வாசகி ஜெயஶ்ரீ சௌந்தரராஜன்
https://youtu.be/dJelQOviTgc

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Darmavan - Chennai,இந்தியா

    தேசிகன் வைஷ்ணவத்தில் முதல் ஆச்சார்யர் இல்லை.குரு பரம்பரையில் முதல் ஆச்சார்யர் நம்மாழ்வார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement