Advertisement

துபாயில் சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது

துபாய் : துபாயில் சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்த போட்டியை துபாய் மாநகராட்சியின் சுற்றுச்சூழல் மையம் நடத்தியது. பள்ளிக்கூட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் 30 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 950 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 250-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுச்சூழல் தூதர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.


அவர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





--- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement