Advertisement

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு

துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் துபாய் லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ஒவ்வொரு ஆண்டும் சுவைமிக்க தமிழக நோன்புக் கஞ்சியுடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ரமலான் மாதம் முழுவதும் தினமும் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர். நோன்புக் கஞ்சியுடன், பேரிச்சம் பழம், ஆரஞ்சு பழம், மோர், ஜூஸ், அரை லிட்டர் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிரியாணியும் கொடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியினை தினமும் அரசு அதிகாரிகளும், தூதரக அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் ஒமர் அல் முத்தன்னா, இந்திய துணைத் தூதரக அதிகாரி நீரஜ் அகர்வால், வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த துணை தலைவர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அசன் முகம்மது ஜின்னா, அமீரக திமுக தலைவர் அன்வர் அலி, பாத்திமா மெடிக்கல் செண்டரின் டாக்டர் ஹுசைன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஈமான் அமைப்பின் பணிகளை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமையில் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், விழாக்குழு துணைச் செயலாளர் கீழக்கரை நஜிம் மரிக்கா, ஆலோசகர் குத்தாலம் அஷ்ரப் அலி, சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார், தேவிபட்டிணம் நிஜாம் அக்பர், காயல்பட்டினம் யஹ்யா முஹ்யித்தீன், இல்யாஸ், செங்கல்பட்டு முஹம்மது அலி, வி.களத்தூர் ஷர்புதீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்து வருகின்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement