Advertisement

சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா

சிங்கப்பூர் : சிங்கப்பூர் கவிமாலை ஏற்பாட்டில் கவிஞர் தங்க.வேல்முருகன் எழுதிய “நினைப்பதற்கு நேரமில்லை “ கவிதை நூல் அறிமுக விழா ஜீன் பத்தாம் தேதி ஆனந்தபவன் வளாக அரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. கவிமாலைக் காப்பாளர் கவிஞர்.மா.அன்பழகன் தலைமை வகித்தார். அவரது தலைமை உரையில் காஞ்சி மகா பெரியவர் வாழ்க்கைச் சம்பவத்தைக் குறிப்பிட்டு தாய்ப் பாசத்தைப் பற்றி உருக்கமாக விளக்கினார். கவிமாலைக் கவிஞர் திருமுருகன் வாழ்த்துப்பா வாசித்தார். தமிழகத்தைச் சேர்ந்த இசாக் , இரத்தின புகழேந்தி, கருணாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் அறிவுமதி சிறப்புரை ஆற்றினார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்தம் வீரம் , கருணை , அன்பு பற்றிப் பல்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி அறிவுமதி உரையாற்றினார். ஜான் ஹாங், ஜெனிபர் ஹாங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். பாவலர் அறிவுமதி நூலினை வெளியிட ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் குழுத் தலைவர் போப்ராஜ் உள்ளிட்ட பிரமுகர்கள் முதற்படி பெற்றுக் கொண்டனர். கவிஞர் லலிதா சுந்தர் நூலாய்வுரை நிகழ்த்தினார். கவிஞர் தங்கமணி நிகழ்வினை நெறிப்படுத்தினார். நூலாசிரியர் தங்க.வேல்முருகனின் ஏற்புரைக்குப் பின் இரவு விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Immanuel - Pudukkottai,இந்தியா

    வாழ்த்துக்கள் அண்ணா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement