Advertisement

ஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா

ஹாங்காங் : ஹாங்காங் சின்மயா மிஷன் சார்பில் ஜூன் 10 ம் தேதியன்று குடும்ப கேளிக்கை திருவிழா நடத்தப்பட்டது. 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள், 40 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் மாண்புகள் குறித்தும், சின்மயா மிஷனின் சேவைகள் குறித்தும் வகுப்புக்கள் நடத்தினர். இந்த ஆண்டு, அனுமன் மேலாவில் 7000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது திருவிழாவின் மிகப் பெரிய வெற்றியாகும்.

விளையாட்டுக்கள், பிரார்த்தனைகள் என சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற விழாவில், பல்வேறு இந்திய உணவகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகளின் கடைகள், ஷாப்பிங் கூடங்கள், யோகா பயிற்சிகள் ஆகியன நாள் முழுவதும் உற்சாக அனுபவத்தை ஏற்படுத்தியது. சீனர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, இந்தியா பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டுள்ளனர். கிருஷ்ணா, கணேசர், சிவா குறித்த மையங்கள் இந்தியாவின் ஆன்மீக மாண்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

ஹாங்காங் மற்றும் மக்காவ்விற்கான இந்திய தூதர் புனீத் அகர்வால் கலந்து கொண்ட இவ்விழாவில் சுவாமினி சுப்ரியானந்தாவின் துவக்கவிழா பூஜையுடன் திருவிழா துவங்கியது. பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மேடையில் தங்களின் திறமையை காட்டினர். சுவாமினி சுப்பிரியானந்தாவின் அற்புதமான கதை கூறுதலுடன் ஏறக்குறைய 6 மணி நேரம் இவ்விழா துவங்கியது. - நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement