Advertisement

பிரான்சில் சங்கடகர சதுர்த்தி

பிரான்சில் சங்கடகர சதுர்த்தி பாரிஸுக்கு அருகில் கிர்ங்கி நகரத்தில் அமைத்துள்ள கைவல்ய கற்பக விநாயகர் ஆலயத்தில் சனாதன தர்ம பரிபாலான சங்கத்தினரால் சிறப்பாக கொண்டா டப்பட்டது. அன்று மாலை விநாயாகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது அதுசமயம் பக்தர்களின் அரோகரா கோஷத்தில் ஆலயமே அதிர்ந்தது.

தொடர்ந்து யாவரும் விநாயகர் துதிப்பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களை பாடினார்கள். பஞ்ச புராணம் பாடியவர்கள் யாவருக்கும் மற்ற அடியார்களுக்கும் கோயில் சிவாசாரியார் தணிகைநாத சர்மா விபூதி,குங்கும, வில்வப்பிரசாதம் வழங்கினார். நேர்த்திக்கடன் செய்ய விரும்பிய பக்தர்கள் நெய் விளக்கு மற்றும் அருகம்பில்,வாழைப்பழமாலை தந்து அலங்காரம் செய்து அழகுப்பார்த்தார்கள். பக்தர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் முத்துக்குமாரன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement