Advertisement

அமீரக திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி

அமீரக திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஹசன் அலி ஜின்னா பங்கேற்றார். அவர் திமுகவின் செயல்வீரர்களது பணிகளை பாராட்டினார். மேலும் துபாயில் ஈமான் கல்சுரல் செண்டர் மத, இன, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சிறப்பான சேவையை மேற்கொள்வதற்கும் தனது வாழ்த்துக்களை கூறினார்.


இவ்விழாவின் தலைவராக அமீரக திமுக தலைவர் அன்வர் அலி தலைமை தாங்கினா. அமீரக திமுக செயலாளர் செயலாளர் பாவை ஹனிபா வரவேற்புயாற்றினார். பிரின்ஸ்(எ) இளவரசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ,காதர்,அனிஸ் தொகுப்பாளர் அப்துல்லா கனி, துபை ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நன்றியுரையை சாகுல் ஹமித் நிகழ்த்தினார். எராளமான அமீரக திமுக நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்...

- நமது செய்தியாளர் காஹிலா​

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement