Advertisement

ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தினம்

ஷார்ஜா : ஷார்ஜாவில் கிரீன் குளோப் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளிக்கூட குழந்தைகள் மரக்கனறுகளை நட்டனர். தக்காளி, கொய்யா, பச்சை மிளகாய், கருவேப்பிலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகளை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் நட்டனர்.


மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க உதவுவோம் என அனைவரும் உறுதியெடுத்தனர். எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான இடமாக இந்த பூமி இருக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யாஸ்மின் அபுபக்கர், மௌலா உள்ளிட்ட பல்வேறு தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.





​--- நமது செய்தியாளர் காஹிலா ​




Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement