Advertisement

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எழுதிய ‘ காதல் வங்கி “ – “ என்னோடு வந்த கவிதைகள்” ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சிங்கப்பூர் உமறு புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் இரா.தினகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூர் இசையமைப்பாளர் குணசேகரன் – ஸ்வப்னாஸ்ரீ ஆகியோர் நூலாசிரியரின் பாடல்களைப் பாட நிகழ்வு தொடங்கியது. அடுத்த அங்கமாக தமிழ் மொழி மாத விழாவின் போது படைக்கப்பட்ட “ வரலாறும் வரிகளும் “ என்ற தொகுப்பிலிருந்து கவிஞரின் வாழ்க்கைச் சம்பவங்களின் ஆவணப் படம் திரையிடப்பட்டது. தேசியப் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன் நூல்களை வெளியிட முதற் படியை ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நாகை தங்கராசு பெற்றுக் கொண்டார். பட்டுக் கோட்டை மருத்துவர் மு.செல்லப்பன் – ஆர். விஜயராகவன் – மதுரை அவனி மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர் .கவிஞரால் உருவாக்கப்பட்ட கோலாலம்பூர் மாணவர்கள் தீபன் – அஸ்விணி செல்வராஜ் ஆகியோருக்கு தமிழ்ச்சுடர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிங்கப்பூர்க் கவிஞர்கள் கி.கோவிந்தராசு – கோ.கண்ணன் – எழுத்தாளர் அழகுநிலா ஆகியோர் வாழ்த்துப் பா வாசித்தனர். கவிமாலை ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் அதன் தலைவர் கவிஞர் இறை.மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். தக்க வகையில் நூலாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ ஏற்புரை ஆற்றினார். கவிஞர் இன்பா நிகழ்வினை கவிச்சுவையோடு நெறிப்படுத்தினார்.


நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement