Advertisement

துபாயில் இந்திய ஓவியர்களின் வரைந்த படங்களின் கண்காட்சி

துபாய் : துபாய் அல் ரிக்கா பகுதியில் உள்ள சுல்தான் பின் அலி அல் ஒவைஸ் கலாச்சார மையத்தின் சார்பில் இந்திய ஓவியர்கள் வரைந்த படங்களின் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஓவியர்கள் தாங்கள் வரைந்த படங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். குறிப்பாக வார்த்தைகள் இல்லாத கவிதையாக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.


இந்த கண்காட்சியில் அமீரக அளவில் பள்ளிக்கூடங்களுக்கு இடையே நடந்த ஓவியம் வரையும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற தமிழகத்தின் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த தஸ்னீம் அபுதாஹிர் தான் வரைந்த மறைந்த அமீரக அதிபர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யானின் படத்தை கொண்டு வந்து ஓவியர்களிடம் காண்பித்தார். பின்னர் அவர்கள் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.


மேலும் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வருமாறு ஆர்வம் ஊட்டினர். அதிகமாக படிப்பதன் மூலம், சமூகத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருவதன் மூலம் படங்கள் வரைவதற்கான கருவை பெற முடியும் என கூறினார்.


----- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement