Advertisement

அஜ்மானில் சைக்கிள் போட்டி

அஜ்மான் : அஜ்மானில் ‘ரைட் அஜ்மான் 2018‘ என்ற பெயரில் சர்வதேச அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டியானது அல் ஜோரா பகுதியில் இருந்து தொடங்கியது.


நகரின் முக்கிய பகுதிகள் வழியாக இந்த சைக்கிள் போட்டி நடந்தது. ​இதனையொட்டி சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


இந்த போட்டியைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். அஜ்மானில் நடைபெற்ற இந்த போட்டியானது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அஜ்மான் போலீசார் சிறப்புடன் செய்திருந்தனர்.


---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement