Advertisement

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சித்திரை திருவிழா 2018




பஹ்ரைன் உம் அல் ஹாசம்: ஆனந்த பவன் ராம்பி உள்ளரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (13/04/18) அன்று பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மூலம் தமிழ் புத்தாண்டு "சித்திரை திருவிழா 2018" மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.


காலை ஒன்பது மணியளவில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு தமிழக விவசாயிகளுக்கு இந்த புதுவருடம் மகிழ்ச்சி தரக்கூடிய வருடமாக அமைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதியா இயற்கையிடம்ராத்தனை செய்து நிகழ்ச்சியை தொடங்கினர்.


நிகழ்ச்சியின் துணை பொறுப்பாளரும், சங்கத்தின் உறுப்பினர் நலத்துறை செயலாளர் திரு. பஞ்சு இராஜ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை வரவேற்று பேசினார்.


அதன் பின் நிகழ்ச்சி பொறுப்பாளரும், சங்கத்தின் இலக்கியத்துறை செயலாளருமான திரு. சுரேஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


ஆதிபரை, புலியாட்டம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் என கலகலப்பாக கொண்டாடப்பட்டது.


இறுதியில் பட்டிமன்ற பங்கேற்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


சங்கத்தின் ஊடகத்துறை துணை செயலாளர் திரு. மதன் நன்றிவுரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. மதிவாணன், திரு. கார்த்திக், திரு. முஹமது பைசல் மற்றும் சங்கத்தின் வேலைவாய்ப்பு செயலாளர் திரு. முகமது அபுசாலி, விளையாட்டுத்துறை துணை செயலாளர் திரு. தாமரைக்கண்ணன், வளர்ச்சித்துறை துணை செயலாளர் திரு. மகரஜோதி, துணைப்பொருளாளர் திரு. தாஜுதீன் மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


சங்கத்தில் இணைய 35362495.


- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement