Advertisement

சிங்கப்பூரில் தமிழர் அறிவியல் விழா

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம் தனது நான்காம் ஆண்டுச் சிறப்பு நிகழ்வாக ஏப்ரல் 21 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் “ தமிழர் அறிவியல் “ என்ற நிகழ்ச்சியைச் சிறப்புறப் படைத்தது. 69 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் ஆய்வுத் திறனை வெளிப்படுத்தினர். கல்லணை பற்றிய ஆய்வையும் மாணவர்கள் படைக்கத் தவறவில்லை .நந்தினி பிரபாகரன் தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டடக் கலை பற்றி எடுத்துரைத்தார் .வெங்கடேஷ்பாபு லதிக்க்ஷா தமது ஆய்வுரையை வெளியிட்டு கரவொலி பெற்றார். நிறைவாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு தமிழில் அறிவியல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகையில் அறிவியலிலும் வர்தகத்திலும் பொருளியலிலும் நாகரிகத்திலும் தமிழர் முன்னோடிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்றும் இன்றைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளை அன்றே தமிழர் கண்டு பயன்படுத்தினர் எனவும் குறிப்பிட்டார். கவிஞர் தங்கமணி நிகழ்வினை நெறிப்படுத்தினார். அ.இளங்கோ வரவேற்புரை நிகழ்த்தினார். ஆய்வுரை நிகழ்த்திய மாணவர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. சிறப்புரைக்குப் பின் பார்வையாளர்களின் ஐயங்களுக்குத் தக்க முறையில் வெ.இறையன்பு விளக்கமளித்தார். சங்கர் நன்றி நவில அரங்கம் நிறைந்த அறிவியல் விழா இனிதே நிறைவு பெற்றது.



நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்





Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement