Advertisement

மாதவி இலக்கிய மன்றத்தின் தமிழ் மாத-தமிழர் திருநாள்!

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் தமிழ் மாத-தமிழர் திருநாள்! அமைச்சர் கா.சண்முகம் முன்னிலை வகிக்க அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூட, கிட்டத்தட்ட 30க்கு மேற்பட்ட பல வயதுப் பள்ளிக் குழந்தைகள் பல்வகைத்த திறன் காட்டி, அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்த கூட்டத்தினரை மகிழ்வித்தனர் . பல பாடல்கள் பாடி ரசனைக்கு விருந்தளித்த பெண்மணிகள் பாராட்டுக்குரியவர்கள் .திருமதி சௌந்தர்யா வைரவனின் உணவு ஆரோக்கியச் சித்தரிப்புடன் கூடிய பாடல் பெரிதும் ரசிக்கப்பட்டது . சீன மலாய் நடனங்கள் போனஸ்! தலைவர் கோவிந்தன் தமிழவேள் மீதான தன் பக்தியைக் குறிப்பிட்டு அன்னாருக்குத் தொடர்ந்து விழா எடுப்பதைத் தன் பாக்கியம் என்றார்.தமிழகக் கல்விமான் திரு.விஸ்வநாதன் சுருக்கமாகவும் , தெளிவாகவும் தமிழின் பெருமையை வெளிப்படுத்தினார் . நடிகர் இயக்குனர் விசு, கலந்து கொண்டு வந்திருந்தோரைப் பரவசப் படுத்தினார். கலந்துரையாடல் நிகழ்வில் வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டு , அரட்டை அரங்க அதிபர் விசுவிடம் பழக்கமான பதில்கள் பெறப்பட்டன. விசுவுக்கு வாழ்நாள் சாதனையாளர்விருது, -கவிஞர் தியாக ரமேஷுக்கு சேவை விருது வழங்கிக் கவுரவித்த டாக்டர் என்.ஆர்.ஜி, தன் புதிய செயற்குழுவை அறிமுகப்படுத்தினார்.

- தினமலர் வாசகர் ஆர்.கே.மணிகண்டன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement