Advertisement

சிங்கப்பூரில் தமிழர் திருநாள் விழா

தமிழ் மொழி விழாவையொட்டி , மாதவி இலக்கிய மன்றம் , தனது 58 ஆவது ஆண்டு விழாவையும், 38 ஆவது தமிழர் திருநாள் விழாவையும் , உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் மிகச் சிறப்பாக நடத்தியது. சிறுவர் - சிறுமியர் ஆட்டம் , பாட்டம் , சீன, மலாய் , சிங்க நடனம் என கலை விழாவாக அரங்கம் அதிர நடைபெற்றது. சட்டம் - உள் துறை அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். எம். இ.எஸ். குழும தலைமை நிர்வாக இயக்குநர் ஹாஜி எம் .ஐலீல் முன்னிலை வகித்தார்.தமிழக - வேலூர் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விஸ்வநாதன் - திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் - வசனகர்த்தா விசு சிறப்புரை ஆற்றினர். விசு அரட்டை அரங்க பாணியில் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார் . செளந்தர்யா வைரவன் ஆரோக்கிய உணவு பற்றி எடுத்துரைத்தார். விழாவில் , கடந்த பல ஆண்டுகளாக இலக்கிய சேவை ஆற்றி வரும் கவிஞர் தியாக ரமேஷைப் பாராட்டி “ மக்கள் தொண்டர் “ பட்டமும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் அளித்து கவுரவிக்கப்பட்டார் . சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் ரா. தினகரன் , பொன்னாடை போர்த்தி, விருது வழங்கிச் சிறப்பித்தார்.மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர். கோவிந்தன் தலைமை வகித்தார். அபிராமி நிகழ்வினை நெறிப்படுத்தினார்.


- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement